ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி புதுப்பொலிவு பெறும்

தூத்துக்குடி, பிப். 14: தூத்துக்குடி நகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பொலிவு பெறும் என்று அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் பேசினார். தூத்துக்குடி அண்ணா நகர் மெயின்ரோட்டில், அதிமுக  அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்  நடந்தது. மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, பகுதி துணை செயலாளர்கள்  கணேசன், ஜெயபாரதி, மாவட்ட பிரதிநிதி உமாகண்ணன், முன்னாள் கவுன்சிலர்  கமலக்கண்ணன், பரமசிவன், ஆனந்தராஜ், சிவன், முருகன், ஆறுமுகம், ராஜா,  நட்டார்முத்து, ஜெயராமன், வீரக்கோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்ட செயலாளர் பூக்கடைவேலு வரவேற்றார்.அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் பேசுகையில், தூத்துக்குடி மாநகர  வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பழைய  பேருந்துநிலையம் புதுப்பொலிவுடன் செயல்படவுள்ளது. 2011 தேர்தல்  பிரசாரத்தின் போது ஜெயலலிதா அறிவித்த திட்டமான விவிடி சிக்னல் மேம்பாலம்  கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. வியாபாரி ஒருவர் தொடர்ந்த  வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் காலதாமதம் ஆகிறது. விரைவில் அதற்கான  அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும். ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ்  தூத்துக்குடி மிகப்பெரிய பல திட்டங்கள் வரவுள்ளன. வருகிற  பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும், என்றார்.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, பேச்சாளர்  லட்சுமணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர். இதில்  மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, கிழக்கு பகுதி செயலாளர் சேவியர்,  முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், போக்குவரத்து தொழிற்சங்க  இணை செயலாளர் சங்கர், ஜெ. பேரவை இணை செயலாளர் ஜீவாபாண்டியன், மேலூர்  கூட்டுறவு வங்கி துணை தலைவர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து  கொண்டனர். வட்ட செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: