காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா

கோவில்பட்டி, ஜன.18: பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி காவலர் குடியிருப்பு காவலர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் 20ம் ஆண்டு விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் மியூசிக் சேர், கயிறு இழுத்தல், ஓட்டபந்தயம் மற்றும் பலவேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு எஸ்பி முரளிராம்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் காவல்துறையினர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

Advertising
Advertising

இதுபோன்று சுபா நகர் குடியிருப்பு நலச் சங்கம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓட்டபந்தயம், சைக்கிள், கபடிபோட்டி, பெண்களுக்கு பானை உடைந்தல், கோலப்போட்டி நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். இதில் டிஎஸ்பி ஜெபராஜ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சங்க செயலாளர் வையணன், பொருளாளர், மணிவண்ணன், துணைத்தலைவர் காளிராஜ், சங்கரநாராயணசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் ரவி, சங்கர், சகாயராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: