விஏஓக்கள் கிராம மக்களிடம் மனு கொடுத்து போராட்டம்

சாத்தான்குளம், டிச.11: சாத்தான்குளத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள், கணனி வசதி,  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  முதற்கட்டமாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் நேற்று முன்தினம் முதல் 12ம் தேதி வரை  விடுப்பு எடுத்து மக்களை தேடி சென்று குறை தொடர்பாக மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இப்போராட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத்தலைவர் சுரேஷ்ராஜா தலைமை வகித்தார். நேற்று புதுக்குளத்தில் கிராம மக்களை சந்தித்து மனு அளித்தனர். இன்று (11ம் தேதி) அரசூரிலும், 12ம் தேதி வெங்கடேஸ்வரபுரத்திலும் மக்களை சந்தித்து மனு அளிக்கின்றனர். இதில் வட்டார செயலாளர்கள் செந்தில்முருகன், வட்டார பொருளாளர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட பிரசார செயலாளர் விஸ்வநாதன் கிராமங்களில் கோரிக்கையை விளக்கி பேசுகிறார்.

Related Stories: