கஜா புயலால் பாதிப்பு தற்காப்புக்காக சீரமைத்த வீடுகளை புகைப்படம் எடுக்கும் அதிகாரிகள் நிவாரணம் கிடைக்குமா?

சேதுபாவாசத்திரம்,  டிச. 5: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் கஜா புயல் கோரதாண்டவமாடியது. இதனால் இந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. 2.50 லட்சம் தென்னை மரங்கள், மா, பலா, தேக்கு என  காட்டு மரங்கள், 246 விசைப்படகுகள், 750க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 5  ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூரை, ஓட்டு வீடுகள் சேதமடைந்தது.

இதைதொடர்ந்து நிவாரணம் அறிவித்து கணக்கெடுக்கும் பணிகளை தமிழக அரசு துவங்கியது. கணக்கெடுப்பு  முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியதால் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்து விட்டது  என கருதி தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியதால் ஒரு சிலர் தங்களது வீடுகளை  தற்காப்புக்காக மராமத்து செய்தனர். ஆனால் 19 நாட்களுக்கு பிறகு  திடீரென மீண்டும் வீடுகளை புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. தற்காப்புக்காக மராமத்து பார்த்த வீடுகளுக்கு நிவாரணம் கிடைக்குமா  என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. பாதிப்புகள் அதிகம் இல்லையென  கூறுவதற்காகவே வீடுகளை புகைப்படம் எடுக்கும் பணியை அரசு துவங்கியுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: