வேலூர் மாநகராட்சி கஸ்பாவில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு முகாமில் 400 பேருக்கு நிலவேம்பு கசாயம்

வேலூர், நவ.19: வேலூர் மாநகராட்சி கஸ்பாவில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு முகாமில் 400 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக வேலூர் மாநகராட்சி கஸ்பா 55வது வார்டு பயர்லைன் பகுதியில் வசித்து வரும் 1,500 துப்புரவு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் குளிர்காலத்தில் பரவும் நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

ஆர்டிஓ மெகராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்தார். 4வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் வரவேற்றார். தொடர்ந்து டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து அங்கிருந்த 400பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன. பின்னர் வீடுகளில் டெங்கு கொசுப்புழுக்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

Related Stories: