காளிப்பட்டி மாரியம்மன் கோயில் தீமிதி விழா

ஆட்டையாம்பட்டி, நவ.8: ஆட்டையாம்பட்டி அருகே காளிப்பட்டி செங்குந்தர் மாரியம்மன் கோயிலில், ஐப்பசி மாத திருவிழா கடந்த 15நாட்களுக்கு முன் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி மாரியம்மனுக்கு பலவித அபிஷேகம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் அக்னிகரகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை பூசாரி முதலில் அக்னிகுண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று(8ம் தேதி) காலை பொங்கல் வைத்தலும், பூந்தேர் ஊர்வலமும், இரவு கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Stories: