சீராக குடிநீர் கிடைக்க ஆழ்குழாய் கிணறு கூடுதலாக அமைக்க நடவடிக்கை வேண்டும்

கரூர், அக். 16:  மொஞ்சனூர் கிராம மக்களுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்ய கூடுதலாக ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா மொஞ்சனூர் கிராம மக்கள் சிலர் வழங்கிய மனுவில், இந்த பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால், ஆழ்குழாய் இல்லாத காரணத்தினால் தண்ணீர் வசதி சரிவர கிடைக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு கூடுதலாக ஆழ்துழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெரும்பாலான மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாவும் இல்லை. எனவே மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வெள்ளக்கோயில் முதல் தென்னிலை வரை விடப்பட்ட பேருந்தும், காங்கேயம் முதல் தொட்டம்பட்டி வரையில் வந்து சென்ற பேருந்தும் தற்போது இயக்கப்படாததால் நாங்கள் பேருந்து வசதி கிடைக்காமல் கடுமையாக அவதிப்படுகிறோம். எனவே, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: