பஸ் வசதி கோரி மனு

சிவகங்கை, அக். 16: சிவகங்கை அருகே வலையராதினிப்பட்டிக்கு பஸ் வசதி கோரி கிராமத்தினர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘வலையராதினிப்பட்டியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் தினமும் பல கி.மீ தூரம் பள்ளி, கல்லூரிக்கு நடந்து சென்று வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே சிவகங்ங்கையில் இருந்து திருமலைக்கு வரும் பஸ்சை ஒரு கிமீ தூரத்தில் உள்ள வலையராதினிப்பட்டிக்கு செல்லும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க வேண்டும். ஒக்கூரில் இருந்து மேலப்பூங்குடி வழியாக மேலூர் செல்லும் அனைத்து பஸ்களையும் வலையராதிப்பட்டி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: