சோழவந்தான் அருகே பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்

சோழவந்தான், அக். 10: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் மாணவ, மாணவிகள்  தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி இரண்டும்  ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. கள்ளர் பள்ளியில் 85 பேரும், ஊராட்சி பள்ளியில் 38 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். இவ்வளாகத்தில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள ஒட்டு கட்டடத்தை சேர்த்து 6 வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. ஆங்கில வழி  எல்.கே.ஜி மற்றும்  யு.கே.ஜி பயிலும் சிறுவர் சிறுமியருக்கான வகுப்பறை வளாகத்தின் கடைசியில் அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழைநீர் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ளதால், பெற்றோர்கள்  தட்டுத் தடுமாறி குழந்தைகளை தூக்கிச் சென்று வகுப்பறையில் விடுகின்றனர். பலமுறை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர். தேங்கும் நீரால் மாணவ, மாணவியர்  சுகாதார பாதிப்படைகின்றனர். பின்னர் ஊராட்சி பணியாளர்கள் தேங்கிய மழைநீரை வெளியேற்றினர்.        எனவே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வாக மண் மேவி பேவர் பிளாக் கற்கள் பதிக்க  மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: