மதுரை தெப்பக்குளத்தை சுற்றிலும் புதிய சாலைகள் அமைக்க எம்எல்ஏ மனு

மதுரை, ஜூன் 23: மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனுஅளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரியம்மன் தெப்பக்குளம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர தெப்பக்குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் மாலை நேரங்களில் பொழுதுபோக்க ஆயிரக்கணக்கில் தினமும் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களும் இயங்கி வருகிறது. இதனை சுற்றியுள்ள சாலைகள் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மதுரை தெப்பக்குளத்தை சுற்றிலும் புதிய சாலைகள் அமைக்க எம்எல்ஏ மனு appeared first on Dinakaran.

Related Stories: