தாய்மாமனை கொல்ல முயன்ற வாலிபர் கைது

திருமங்கலம், ஜூன் 21: திருமங்கலம் அருகே தாய் மாமாவை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகேயுள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் மார்நாடு (45). விவசாயியான இவரது தங்கை மகன் ராஜா (24). இவர் கட்டிடத் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு மார்நாடு, ராஜா இருவருக்கும் நெடுமதுரை ரேஷன் கடை அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மார்நாடு கையில் இருந்த அரிவாளால் மருமகன் கையை கிழிந்துள்ளார். ஆத்திரமடைந்த ராஜா பாட்டிலால் தாய் மாமன் மார்நாடு நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் மார்நாடு மயங்கவே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். காயமடைந்த ராஜா திருமங்கலம் அரசு மருந்து துமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக மார்நாடு மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் ராஜாவை கூடக்கோவில் போலீசார் கைது செய்தனர். ராஜா கொடுத்த புகாரின் பேரில் அவரது தாய்மாமன் மார்நாடு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post தாய்மாமனை கொல்ல முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: