வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

மதுரை, ஜூன் 26: மதுரையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அழகர்கோவில் அருகே ஏ.வலையபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(40). இவர் தனக்கன்குளம் சந்திப்பில் டூவீலர் ஓட்டிச் சென்றார். அப்போது திருநெல்வேலி மாவட்டம் பாரதி நகர் துறையூரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, ஆறுமுகம் சென்ற டூவீலர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி காட்டு ராணி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், மதுரை திருமால்புரம் ஆலத்தூர் பிஎஸ்என்எல் நகரை சேர்ந்தவர் கமலா(55). இவரது கணவர் கார்மேகம்.

இவர்கள் இருவரும் டூவீலரில் ஊமச்சிகுளம் ஆலத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக அலங்காநல்லூர் பாண்டி என்பவர் ஓட்டிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் கணவர், மனைவி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கார்மேகம் பலத்த காயமடைந்தார். கமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கணவர் கார்மேகம் அளித்த புகாரில், ஊமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: