நிலத்திற்கு பட்டா கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

மதுரை, ஜூன் 22: மதுரை, வண்டியூர் தீர்த்தக்காட்டில் ஆதிதிராவிட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட விசிக முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு கூறும்போது, ‘‘1982ல் வைகையில் வெள்ளம் வந்த போது ஆதிதிராவிடர் நலத்துறையால் இங்கு வசிக்கும் ்பொதுமக்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இங்குள்ளவர்களுக்கு சுமார் 9 ஏக்கர் 13 சென்ட் இடம் வழங்கப்பட்டு பின்னர் வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் இம்மக்களின் கோரிக்கையை ஏற்று நிலம் மீட்கப்பட்டது. அதன் பிறகும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. இதனால் கடந்த 34 ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்களுக்கு மின் இணைப்பு, சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இங்குள்ள இடத்தை அளந்து தூசி பட்டா வழங்கும் பணிகள் நடைபெறவில்லை’’ என்றார்.

The post நிலத்திற்கு பட்டா கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: