மதுரை, யாதவர் கல்லூரியில் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு முகாம்

மதுரை, ஜூன் 21: மதுரை யாதவர் கல்லூரி, மகளிர் நல மேம்பாட்டுக் குழு. மதுரை ரோட்டரி சங்கம் மற்றும் லைப்கேர் டயக்னோசிஸ் சார்பில் நேற்று மாணவிகளுக்கான இரத்தசோகை விழிப்புணர்வு மற்றும் ஹீமோகுளோபின் அவைக் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. இதில் மாணவி சபீகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் செ.ராஜூ தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மதுரை ரோட்டரி சங்க தலைவர் சிவசங்கர், செயலாளர் லெனின்குமார், கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் அ.இராசகோபால் வாழ்த்துரை வழங்கினர். இக்கருத்தரங்க நிகழ்வின் நோக்க உரையை மகளிர் நல மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் து.தேவகி வழங்கினார். இந்நிகழ்வில் யாதவர் கல்லூரி முன்னாள் செயலாளர் மற்றும் தாளாளர் மதுரை, சென்னை பார்க் பிளாசா குழும நிறுவனர் க.ப.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், தங்கள் ஆரோக்கியத்தில் மகளிர் அக்கறை கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்வில் 248 மாணவிகள், 55 ஆசிரியர்கள் பங்கேற்றனர். முடிவில் மாணவி சந்திரப்பிரியா நன்றி கூறினார்.

The post மதுரை, யாதவர் கல்லூரியில் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: