இலவச கண் சிகிச்சை முகாம்

நாசரேத், செப். 26: நாசரேத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.  நாசரேத்  பீஸ் அன்டு பிரண்ட்ஸ் டிரஸ்ட், நெல்லை டாக்டர் அகர்வால் கண்  மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நாசரேத் பீஸ் தையல் பயிற்சி  பள்ளி வளாகத்தில் நடந்தது. வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் டேனியல் சுந்தர்ராஜ் துவக்கிவைத்தார். நாசரேத் பீஸ்  அன்டு பிரண்ட்ஸ் டிரஸ்ட் மெனஜ்மண்ட் டிரஸ்டி மேகலா டேனியல், பேராசிரியை  ஸ்வீட்டி  முன்னிலை வகித்தனர்.

 இதில் பங்கேற்ற மக்களுக்கு நெல்லை டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை டாக்டர் வேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வானர்கள் நெல்லைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  ஏற்பாடுகளை நாசரேத் பீஸ் அன்டு பிரண்ட்ஸ் டிரஸ்ட்  ஊழியர்கள் மற்றும் பீஸ் தையல் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் செய்திருந்தனர்.

Related Stories: