குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவரிடம் விசாரணை முடிந்தது

கோவை, செப். 21: கோவையில் கடந்த 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 157 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் திருவன்னு பகுதியை சேர்ந்த என்.பி.நூகு என்கிற ரஷீத் (44) வெளிநாட்டில் பதுங்கியிருந்தார்.  இந்நிலையில் கத்தார் நாட்டில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடந்த 10ம் தேதி வந்த ரஷீத்தை தமிழக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் ரஷீத் கைது செய்யப்பட்டதால் 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட் அனுமதி வழங்கியது. இந்த இரண்டு நாள் கஸ்டடி விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: