திருப்பத்தூரில் இருந்து நாளை தொடங்குகிறது பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார பாத யாத்திரை ஜி.கே.மணி தகவல்

வாணியம்பாடி, செப்.21: பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார பாத யாத்திரை நாளை திருப்பத்தூரில் இருந்து தொடங்க உள்ளதாக பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் வேலூர் வடமேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:வேலூர் மாவட்டத்தில், பாமக சார்பில் பாலாற்றை காப்போம் என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் நாளை 22ம் தேதி தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூரில் தொடங்கி திருப்பத்தூர் வரை நடக்கிறது. அங்கிருந்து மறுநாள் (23ம் தேதி) காலை திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் வரையில் பாத யாத்திரை செல்ல உள்ளோம்.

இந்த பாதயாத்திரையை மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமை தாங்கி நடத்த உள்ளதால், கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் ஏராளமான பாமக நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையை நேரில் சென்று பார்வையிட்டார்.

Related Stories: