அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, செப்.19:அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்தும், ஊழல் புகாரில் சிக்கிய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும், தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாளை ரோடு - சிதம்பரநகர் பேரூந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகைளில், மத்திய, மாநில அரசுகள் மக்களை வஞ்சித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை மும்மடங்கு உயர்த்தியுள்ளார்கள். நெடுஞ்சாலைத்துறையை கையில் வைத்துள்ள முதல்வர், நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு டெண்டர் விடாமல் கோடி கோடியாக ஊழல் செய்து வருகிறார். தூத்துக்குடி மாநகராட்சியில் பணிகளுக்கு டெண்டர் விடாமலேயே மோசடிகள் நடக்கிறது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் அழகுபடுத்த திட்டமிடுகிறார்கள். 4வது பைப்லைன் திட்டம் என்ற பெயரில் ரூ.255கோடி கூட்டுக் கொள்ளை நடந்துள்ளது. இந்த ஊழல் அரசு விரைவில் முடிவுக்குவரும். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ராஜமன்னார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார்ரூபன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, முன்னாள் எம்எல்ஏ பெருமாள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ஜான் அலெக்ஸாண்டர், மோகன்தாஸ் சாமுவேல், அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் பிரதீப், அம்பாசங்கர், டேவிட்ராஜ், கருப்பசாமி, இம்மானுவேல், பாலகுருசுவாமி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த்  கேப்ரியல்ராஜ், துணை அமைப்பாளர் சிவசங்கர், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், வசந்தம் ஜெயக்குமார், சின்னமாரிமுத்து, செல்வராஜ், நவநீதகிருஷ்ணன், மாநகர அவைத்தலைவர் ஆறுமுகம், மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், பாலசுப்பிரமணியன், ரவீந்திரன், சுரேஷ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், தலைமை பேச்சாளர் சரத்பாலா, கோவில்பட்டி நகர செயலாளர் ராமர், முன்னாள் செயலாளர் ராமர், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ஜெயசிங், அண்ணாநகர் பகுதி துணை செயலாளர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: