வேலூரில், திருவண்ணாமலை மாவட்டத்தினர் பங்கேற்பு 2ம் நிலை காவலர் தேர்வில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு ஆண்களுக்கு இன்று கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போட்டி

வேலூர், செப். 11:வேலூரில் 3வது நாளாக நடந்த 2ம் நிலை காவலர் தேர்வில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடந்தது. தொடர்ந்து ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் இன்று காலை நடக்கிறது.தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடந்து வருகிறது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 2784 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

வேலூர் நேதாஜி ஸ்ேடடியத்தில் கடந்த 7ம்தேதி உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் 632 பேர் 2ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். 8ம் தேதி நடந்த தேர்வில் 599 பேர் 2ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். ஆண்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று பெண்களுக்கான தேர்வு நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 447 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 337 பேர் என மொத்தம் 784 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
Advertising
Advertising

நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்து வரும் 2ம் நிலை காவலர் தேர்வு தமிழக மதுவிலக்கு அமல்பிரிவு ஐஜி சுமித்சரண் முன்னிலையில் சான்றுகள் சரிபார்க்கும் பணியும், பின்னர் உயரம், மார்பளவு அளவிடும் பணியும், அதை தொடர்ந்து 400 மீட்டர் ஓட்டமும் நடந்தது. இதனை வேலூர் சரக டிஐஜி வனிதா, சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆண்கள் பிரிவில் 2ம் கட்ட தேர்வில் தகுதி பெற்ற 1231 பேருக்கு இன்று முதல் கயிறு ஏறுதல், 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர், நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 7ம் தேதி தேர்வு செய்யப்பட்ட 632 பேருக்கு முதற்கட்டமாக இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: