மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் போரூர் ஷோரூமில் நகை கண்காட்சி

சென்னை: போரூர் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் ஷோரூம் சார்பில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. சென்னை போரூரில் மலபார் கோல்டு மற்றும் வைர நகைகளின் கண்காட்சி கடந்த 11ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் ஒரே இடத்தில் தங்கம், வைரம் மற்றும் விலைமதிக்க முடியாத வைடூரியம் போன்ற கற்கள் பதிக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.  வரும் 19ம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு மலபார் நிறுவனத்தின் அரிய படைப்புகள் விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நகைகள் அனைத்தும் திறமை வாய்ந்த கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் மனங்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு பிரமாண்ட டிசைனில் உருவாக்கப்பட்ட வைர நகைகள், இயற்கையிலேயே அழகாக உருவான வைரங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட தங்க, வைர மற்றும் வெள்ளியிலான நகைகள் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் கண்காட்சிக்கு ைவக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்ட நகைகளும் அனைவரையும் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. மலபார் கோல்டு ஷோரூம் உலகில் 10 நாடுகளில் 300 கடைகளுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: