நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இலங்கை 355 ரன்னில் ஆல்அவுட்: சவுத்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

கிறிஸ்ட்சர்ச்: இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில், ஒஷடா பெர்னாண்டோ 13, குசால் மென்டிஸ் 87, கேப்டன் கருணாரத்னே 50, தினேஷ் சன்டிமால் 39, மேத்யூஸ் 47 ரன் எடுத்தனர். நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 75 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா 39, கசுன் ரஜிதா 16 களத்தில் இருந்தனர். 2வது நாளாக இன்று தனஞ்ஜெயா டிசில்வா 46 ரன்னில் சவுத்தி பந்தில் கேட்ச் ஆனார். ரஜிதா 22, பிரபாத் ஜெயசூர்யா 13, அசித்த பெர்னாண்டோ 10 ரன்னில் அவுட் ஆகினர். 92.4 ஓவரில் 355 ரன்னுக்கு இலங்கை அணி ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்துபவுலிங்கில் கேப்டன் சவுத்தி 5, மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் நியூசிலாந்தின் டாம் லதாம், டெவோன் கான்வே முதல் இன்னிங்சை தொடங்கினர். முதல் விக்கெட்டிற்கு 67 ரன் சேர்த்த நிலையில், கான்வே 30 ரன்னில், அசித்த பெர்னாண்டோ பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் ஒரு ரன்னில் லஹிரு குமாரா பந்தில் கேட்ச் ஆனார். தேனீர் இடைவேளையின் போது நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன் எடுத்திருந்தது.  பின்னர் ஆட்டம் தொடங்கியதும் நிக்கோலஸ் 2 ரன்னில் குமாரா பந்தில் கேட்ச் ஆனார். 49 ஓவரில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன் எடுத்திருந்தது. லதாம் 65, டேரி மிட்செல் 29 ரன்னில் களத்தில் இருந்தனர்.

Related Stories: