கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு

லண்டன்: இந்திய வேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். அப்போது கணுக்கால் வலியால் அவதிப்பட்ட அவர் ஊசி மூலம் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். ஐபிஎல் முடிவடைந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து லண்டன் சென்ற தாகூருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதற்கு முன்பு இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் தான் ஷர்துல் தாகூருக்கும் அறுவை சிகிச்சை செய்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருப்பது போன்று ஒரு படத்தை வெளியிட்டு ‘‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, அடுத்த 8 வாரத்திற்குள் எழுந்து நடமாடுவேன்’’ என்று ஷர்துல் பதிவிட்டுள்ளார். இந்திய உள்ளூர் போட்டிகள் அடுத்த 3 மாதங்களில் தொடங்க உள்ளதால் அதில் ஷர்துல் தாகூர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களம் கண்ட ஷர்துல் அதன் பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு appeared first on Dinakaran.

Related Stories: