மகளிர் பிரீமியர் லீக் தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூரு?: உ.பி.யுடன் இன்று மோதல்

மும்பை: 5 அணிகள் பங்கேற்றுள்ள முதலாவது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி.20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 18 ஓவரில் 105 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மெக் லானிங் 43, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 25 ரன் எடுத்தனர். மும்பை பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக், ஹெய்லி மேத்யூஸ், வேகப்பந்து வீச்சாளர் இசி வோங்க் ஆகியோர் தலா 3 விக்கெட் சாய்த்தனர். பின்னர் களம் இறங்கிய மும்பை, 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

யாஸ்திகா பாட்டியா 41 (32பந்து), ஹேலி மேத்யூஸ் 32 ரன் அடித்தனர். ஸ்கிவர்-பிரண்ட் 23, ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்னில் களத்தில் இருந்தனர். சாய்கா இஷாக் ஆட்டநாயகி விருதுபெற்றார்.

இன்று இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் 8வது லீக் போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உபி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் குஜராத்தை வீழ்த்திய உ.பி. 2வது போட்டியில் டெல்லியிடம் தோற்றது. இன்று 2வது வெற்றிக்காக போராடும். மறுபுறம் மந்தனா தலைமையிலான பெங்களூரு 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இன்று வெற்றிகணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Related Stories: