மீண்டும் எம்மா

பிரிட்டன் வீராங்கனை எம்மா ரெடுகானு(20வயது, 77வது ரேங்க்) 2021ல்  யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். ஆனால் அதன் பிறகு  ஒரு பட்டம் கூட எம்மா வெல்லவில்லை. இடையில் காயம் காரணமாக 2022 ஆண்டு பெரிய அளவில் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடைபெறும் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இன்று களம் காண உள்ளார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ள இந்த ஆட்டத்தில் மாண்டிநீக்ரோ வீராங்கனை  டங்கா கோவினிச்(28வயது, 62வது ரேங்க்) உடன் மோத இருக்கிறார்.

Related Stories: