துபாய்: ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக், இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீசின் குடாகேஷ் மோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
