சென்னை: 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தொடக்க லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
