மும்பை: முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி.20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றது. மும்பை பிரபோர்ன் மற்றும் நவிமும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இந்த தொடர் நடக்கிறது.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம்பெறலாம். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது, 3வது இடம் பெறும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. முன்னதாக கண்கவர் தொடக்க விழா நடக்கிறது. இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.