பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் கால் மேல் கால் போட்டு குடிமகன் ஹாயாக படுத்து தூங்கிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையிலிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம் ஆகிய ஊர்களுக்கு செல்பவர்கள் பரமக்குடி வழியாகத்தான் செல்ல வேண்டும். தினசரி டூவீலர், கார், பஸ் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த தேசிய சாலையில் சென்று வருகின்றன.
