அக்சர் பட்டேலை 9வது இடத்தில் களம் இறக்குவதா?

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியிருப்பதாவது: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியர்களை போல இந்திய அணி பேட்ஸ்மேன்களிடம் ஒழுங்கான பார்ட்னர்ஷிப் இல்லை. பேட்டர்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக விளையாட வேண்டும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பீல்டர்களுக்கு நாம் அங்கீகாரம் வழங்க வேண்டும். கவாஜா மிகச் சிறப்பான கேட்ச் செய்து ஸ்ரேயாசை வெளியேற்றினார். அந்த நேரத்தில் அங்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் உருவாகி இருந்தது. அதேபோல் புஜாராவையும் ஸ்மித் வெளியேற்றினார்.

அக்சர் பட்டேல் ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு பார்ட்னர்கள் இல்லாமல் அவர் நிற்க வேண்டியதாய் இருந்தது. இந்தத் தொடர் முழுவதும் ரன்கள் குவித்தவர்களில் அவர் தான் முதலில் இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அவர் ஒன்பதாவது இடத்தில் தான் அனுப்பப்பட்டார். இந்திய அணியின் சிந்தனையாளர் குழு என்ன நினைக்கிறது என்று எனக்கு புரியவில்லை, என தெரிவித்துள்ளார்.

Related Stories: