சதம் விளாசிய வில்லியம்சன் வெலிங்டன் டெஸ்ட் ஆட்டம்: வெற்றி வாய்ப்பில் இங்கிலாந்து

வெலிங்டன்: நியூசிலாந்து-இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் ஆட்டம் நியூசியின் வெலிங்டன்னில் நடக்கிறது. முதலில் களமிறங்கிய இங்கி முதல் இன்னிங்சில் 87.1ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 435ரன் விளாசி டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 53.2ஓவரில் 209ரன்னுக்கு சுருண்டது. அதனால் ‘ஃபலோ ஆன்’ பெற்று 2வது இன்னிங்சை விளையாடிய நியூசி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 83ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 202ரன் எடுத்திருந்தது.  களத்தில் இருந்த வில்லியம்சன் 25, நிகோலஸ் 18ரன்னுடன் 4வது நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தனர்.

மேலும் 11ரன் சேர்ந்த நிகோலஸ் 29ரன்னில் வெளியேறினார். அதனால் உள்ளே வந்த டாரியல் மிட்செல் 54ரன்னில் 54ரன் குவித்து வெளியேறினார். அதன் பிறகு பிளண்டல், வில்லியம்சன்னுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசி ஸ்கோர் உயர்ந்தது. கூடவே தனது 26வது சதத்தை விளாசிய வில்லியம்சன் 132 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் பிளண்டலுடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 158ரன் சேர்த்தார். அதன் பிறகு வந்தவர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற  நியூசி 2வது இன்னிங்ஸ் 162.3ஓவரில் 483ரன் குவித்தது. சிறப்பாக விளையாடிய பிளண்டல் 90ரன்னுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5விக்கெட் அள்ளினார்.

அதனையடுத்து 257 ரன் பின்தங்கிய இங்கிலாந்து 258ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி நேற்று 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 11ஓவருக்கு  ஒரு விக்கெட்  மட்டும் இழந்து 48ரன் எடுத்துள்ளது.  அந்த அணியின் பென் டக்கெட் 23, ஒல்லி ராபின்சன் ஒரு ரன்னுடன் களத்தில்  இருக்கின்றனர். நியூசி தரப்பில்  கேப்டன் டிம் சவுத்தீ ஒரு விக்கெட்  எடுத்தார். இன்னும் ஒருநாள் ஆட்டமும், 9 விக்கெட்களும் கைவசம் இருக்க 210ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கடைசி நாளான இன்று இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடர்கிறது.

Related Stories: