நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஹாரிபுரூக், ஜோ ரூட் சதம் விளாசல்: இங்கிலாந்து ரன் குவிப்பு

வெலிங்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 2வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சாக் கிராலி 2, பென் டக்கெட் 9 ரன்னிலும் பின்னர் வந்த ஒல்லி போப் 10 ரன்னிலும் அவுட் ஆகினர். 21 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் ஜோரூட்- ஹாரி புரூக் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

புரூக் 107 பந்தில் சதம் விளாசினார். தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் இருவரும் அதிடியாக ஆடினர். ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விளாசினார். 65 ஓவரில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் எடுத்திருந்தபோது மழையால் போட்டி தடைபட்டது. அப்போது புரூக் 184(169பந்து, 24பவுண்டரி, 5 சிக்சர்), ஜோ ரூட் 101 (182பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர்.

Related Stories: