பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் அல்கரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் இங்கிலாந்தின் கேமரான் நோர்ரியுடன் (27 வயது, 13வது ரேங்க்) மோதிய அல்கரஸ் (19 வயது, 2வது ரேங்க்) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். காயம் காரணமாக 3 மாதங்களுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த அல்கரஸ், நடப்பு சீசனில் களமிறங்கிய முதல் தொடரிலேயே பட்டம் வென்று அசத்தியுள்ளார்.