மகளிர் உலக கோப்பை டி20 வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

கேப் டவுன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீசுடன் நேற்று மோதிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. டெய்லர் 42, கேம்ப்பெல் 30, நேஷன் 21*, ஷபிகா 15 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 3, ரேணுகா, பூஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. ஷபாலி 28, மந்தனா 10, கேப்டன் ஹர்மன்பிரீத் 33, ரிச்சா கோஷ் 44* ரன் எடுத்தனர். தீப்தி ஷர்மா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2 புள்ளிகள் பெற்றது. இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் இங்கிலாந்துடன் மோதுகிறது.

Related Stories: