மகளிர் டி.20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2வது வெற்றி

கெபெர்ஹா: 10 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நேற்றிரவு நடந்த 8வது லீக் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 57 (50 பந்து), ஷோர்னா அக்டர் 12 ரன் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா பவுலிங்கில், ஜார்ஜியா வேர்ஹாம் 3விக்கெட் வீழத்தினார்.  பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், அலிசா ஹீலி 37, கேப்டன் மெக் லானிங் நாட் அவுட்டாக 48, ஆஷ்லே கார்ட்னர் 19ரன் (நாட்அவுட்) அடிக்க 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஜார்ஜியா வேர்ஹாம் ஆட்டநாயகி விருது பெற்றார். முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியாவுக்கு இது 2வது வெற்றியாகும். முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்ற நிலையில் 2வது தோல்வியை சந்தித்த வங்கதேசம் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது.

Related Stories: