லியோ படத்தில் அபிராமி வெங்கடாசலம்

சென்னை: விஜய்யின் லியோ படத்தில் அபிராமி வெங்கடாசலம் நடிக்கிறார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தோழியாக நடித்தவர் அபிராமி வெங்கடாசலம். மாதவன் நடித்து, இயக்கிய ராக்கெட்ரி படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்க உள்ளார். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிக்க அபிராமி தேர்வாகியுள்ளார். அவர் அவசரமாக காஷ்மீருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு உள்ள லியோ படக்குழுவுடன் அபிராமியும் இணைந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைத்தளத்திலும் அபிராமி பகிர்ந்திருக்கிறார்.

Related Stories: