ஜாவேத் மியான்டட் கருத்துக்கு வெங்கடேஷ் பிரசாத் பதிலடி

பெங்களூரு:இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா அங்கு செல்லாது எனவும், அந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட் தலையிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா ஏன் இவ்வளவு பயப்படுகிறது? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என்பது பிசிசிஐக்கு தெரியும்.

அதனால் தான் இப்படி பயப்படுகிறார்கள். பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால் நரகத்திற்கு தான் அவர்கள் செல்வார்கள். இந்தியாவை நம்பி நாங்கள் இல்லை. எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டே தீர வேண்டும், என சாடி உள்ளார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் நரகத்திற்கு செல்ல மறுக்கிறார்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: