தேசிய டேபிள் டென்னிஸ் சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: தமிழ் நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் 84வது தேசிய இளையோர் டேபிள்  டென்னிஸ் போட்டி, சென்னையில் நாளை தொடங்குகிறது.  சுமார் 15ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் நாட்டில் இப்போட்டி நடக்கிறது. நாடு முழுவதும் 30 மாநிலங்கள், நிறுவனங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 1300 பேர் பங்கேற்க உள்ளனர். போட்டிகள் நாளை முதல் பிப்.18ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும். நாளை மாலை நடக்கும் விழாவில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார். இத்தகவலை, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவர் தேவநாதன், செயலாளர் வித்யாசாகர், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: