சில்லி பாயின்ட்...

* இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் கிரகாம் ரீட் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப். 15.

* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் களமிறங்க உள்ள தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த தொடரில் அந்த அணிக்கு கேப்டனாக சுனே லுவஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* 2023 லண்டன் மாரத்தான் ஓட்டப் பந்தயமே தான் பங்கேற்கும் கடைசி போட்டியாக இருக்கும் என்று இங்கிலாந்து தடகள நட்சத்திரம் மோ ஃபாரா (40 வயது) அறிவித்துள்ளார். இவர் 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் 5,000 மற்றும் 10,000 மீட்டர் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* 2023 கவுன்டி சீசனில் இந்திய வீரர் அஜிங்க்யா ரகானே (34 வயது) லீசெஸ்டர்ஷயர் கிளப் அணிக்காக விளையாட உள்ளதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

* வங்கதேச கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் சண்டிகா ஹதுரசிங்கா (54 வயது, இலங்கை) பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* 2வது டி20 போட்டி நடைபெற்ற லக்னோ ஆடுகளம் மோசமாக இருந்ததாக விமர்சனம் எழுந்த நிலையில், ஆடுகள பராமரிப்பாளர் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய பராமரிப்பாளராக அனுபவம் வாய்ந்த சஞ்சீவ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: