இந்திய அணி விராட் கோலியை நம்பியிருப்பதால் அவர் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்: சவுரவ் கங்குலி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலியை வெகுவாக நம்பியிருப்பதால் அவர் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.     

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விராட் கோலி கடந்த சில வருடங்களாக வழக்கம் போல் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தார். விராட் கோலியின் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.

ஃபார்ம் இன்றி தவித்து வந்த விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதமடித்து மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பினார். டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு திரான போட்டியில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு மிரளவைத்தார். இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 2 சதங்கள் அடித்து அசத்தினார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒப்பிடுகையில் விராட் கோலியின் ஃபார்ம் சற்று குறைவாக உள்ளதாகவே கருதப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலியை நம்பியிருப்பதால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Related Stories: