‘கேசியோ வாட்சுக்காக ரோலக்ஸை வித்துட்ட..’ மாஜி கணவனையும், இளம் காதலியையும் பாடலில் பழிதீர்த்த பிரபல பாடகி ஷகிரா

பிரபல கொலம்பிய இசை பாடகி ஷகிராவின் புதிய பாடல் இப்போது சக்கைப்போடு போட்டு வருகிறது. சர்ச்சைகளிலும் சிக்கி உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த புதன் இரவு தான் இப்பாடல் வெளியானது. 9 கோடியையும் தாண்டி பார்வையிடப்பட்டுள்ளது. இப் பாடல் வரிகளில் தான் அணுகுண்டை வைத்திருந்தார். தனது முன்னாள் கணவரான கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக்கையும் அவரது புதிய காதலியான கிளாரா சியா மார்ட்டியையும் மறைமுகமாக குறிப்பிட்டு ஷகிரா தனது வஞ்சத்தை தீர்த்துள்ளார். ஷகிராவுக்கு இப்போது வயது 45. அவரது மாஜி கணவனின் புதிய காதலி கிளாராவுக்கு வயது 22. இதை ஒப்பிடும்விதமாக,

‘இரண்டு 22 வயசு பெண்களுக்கு சமமானவள் நான்..

தெரியுமா உனக்கு’

என்று தற்பெருமை பேசுகிறது ஒரு வரி. அது மட்டுமல்ல,

‘ஏய் நீ.. ட்விங்கோ காருக்காக ஃபெராரியை கைமாற்றியுள்ளாய்... கேசியோ வாட்சுக்காக ரோலக்ஸை விற்றிருக்கிறாய்’ என்றும் போட்டுத் தாக்கியிருக்கிறார். சொந்த பிரச்னைக்காக பழைய கணவனையும் அவரது காதலியையும் சம்பந்தமில்லாமல் தாக்கியிருக்கிறார் என பலரும் இதை கண்டித்துள்ளனர். ஆனால் இந்த இசை தொகுப்பை வெளியிட்ட நிறுவனமோ, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை... எதையும் தொடர்புபடுத்தாதீர்கள்’ என தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.

 ஷகிராவின் மாஜி கணவன் பிக், இதற்கு சமூக வலைத்தளத்தில் கொடுத்த பதில்தான் சூப்பர் ரகம்.

‘கேசியோ வாட்ச் நீடித்து உழைப்பவை’

 ஷகிராவின் பாட்டு தாக்குதலில் சிக்கிய இரண்டு பெரிய நிறுவனங்களும் இதை தாழ்வாக நினைக்கவில்லை. பகடியாக டிவிட் செய்து கடந்து போயிருக்கிறார்கள். ஒரு நெகடிவ் பப்ளிசிட்டி என எடுத்துக்கொண்டு விட்டார்கள். கேசியோ நிறுவனம் தனது டிவிட்டில், ‘‘கேசியோ வாட்ச் பற்றி ஒரு பாடலில் இடம்பெற்றதாக அறிகிறோம். கேசியோ வாட்ச், கீ-போர்ட், கால்குலேட்டர் எல்லாம் நீண்ட காலத்துக்கு உழைப்பவை’’ என்று குறிப்பிட்டு ஹார்டர், பெட்டர், ஃபாஸ்டர், ஸ்ட்ராங்கர் என ஹேஷ்டேக்கையும் வைத்துள்ளது.  

ரெனால்ட் நிறுவனமோ தங்களது ட்விங்கோ காருக்கான இலவச விளம்பரமாகவே இதை கருதியுள்ளது. ட்விங்கோ காரை, ஜெரார்ட் பிக்கின் இளவயது காதலியான கிளாராவுடன் தான் ஷகிரா ஒப்பிட்டிருக்கிறார். எனவே அதுபோல இளமையான கார் தான் ட்விங்கோ என பொருள்படும்படி விளம்பரப்படுத்தி வருகிறது. மேலும் கிளாரா என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் கிளியர் அதாவது தெளிவான என அர்த்தம். அதையும் இதில் ரெனால்ட் நிறுவனம் குறிப்பிட்டு, சிவப்பு நிற ட்விங்கோ காரின் படத்தையும் தங்கள் பதிவில் வெளியிட்டுள்ளது. அதில் டிரைவர் பக்கத்தில் உள்ள காரின் கதவில் 22 என எழுதி வட்டமிடப்பட்டுள்ளது. கிளாராவின் 22 வயதைப் போல இளமையுள்ள கார் என்பது ஒப்பீடாம்.

ஒரு பாடல் இப்படி பரபரவென ஓடுகிறது.

Related Stories: