உலக கோப்பை தொடரில் இஷான் கிஷன் ஓபனிங் வீரராக ஆடவேண்டும்: பிரட்லீ சொல்கிறார்

சிட்னி: ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட்லீ அளித்துள்ள பேட்டி: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இஷான்கிஷன் அதிவேக இரட்டை சதத்தை அடித்ததின் மூலம் உள்நாட்டில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான துவக்க வீரர் இடத்திற்கு தன் பெயரை அழுத்தமாகப் பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது நடக்க வேண்டுமா என்றால் கட்டாயம் நடக்க வேண்டும்.

அவர் ஆட்டத்தில் நிலைத்தன்மையைக் காட்ட முடிந்து உடற் தகுதியோடு தொடர்ந்து இருந்தால், அவர்தான் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கான துவக்க வீரராக இருக்க வேண்டும். அவர் அடித்த தனது இரட்டை சதத்தை அதைவிட வேகமாக மறந்துவிட வேண்டும். இந்தப் புகழ்ச்சிகள் எல்லாம் ஒரு மாதிரி சிலந்தி வலையில் சிக்க வைக்கக் கூடியது. அவருக்கு என் அறிவுரை என்னவென்றால், இரட்டை சத மைல்கல்லை மறந்து விடுங்கள், சாதிக்க மிகப்பெரிய மைல்கல்கள் உண்டு என தெரிவித்திருக்கிறார்.

Related Stories: