ஒடிசா ஓட்டலில் தங்கியிருந்த 2 ரஷ்யர்கள் அடுத்தடுத்து மரணம்

ராயகடா: ஒடிசா மாநிலம்  கந்தமால் மாவட்டத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விளாடிமிர், பவல் கீதம் உட்பட நான்கு பேர் வந்தனர். அவர்கள் சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ராயகடா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓட்டல் அறையில் விளாடிமிர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலாப் பயணியான பவல் கீதம், ஓட்டலின் பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சர்மா கூறுகையில், ‘விளாடிமிர் மர்ம மரணத்தை தொடர்ந்து பவல் கீதம் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விளாடிமிரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பவல் கீதம் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஓட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் மரணம் தொடர்பாக ரஷ்ய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: