கிண்டியில் 20ம் தேதி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு முப்பெரும் விழா: ஆ.ஹென்றி அறிக்கை

சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்புநிறுவன தலைவர் ஆ.ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா சென்னை கிண்டியில உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் வரும் 20ம்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.  

எனது தலைமையிலும், தலைமை நிலைய செயலாளர் கே.பொன்குமார் முன்னிலையிலும் கட்டுமானம் - மனை வணிகம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் உதவும் வகையில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை மற்றும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட துறைகளில் பொதுமக்களின் நலன் கருதி முப்பெரும் விழாவாக  நடத்தப்படுகிறது.

விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, மூர்த்தி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ், புலவர் ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இதில், ரியல் எஸ்டேட் துறை மேலும் வளர்ச்சியடையவும், எழுச்சிபெறவும் முக்கிய தீர்மானங்கள் கோரிக்கையாக முன்வைக்க உள்ளோம். இந்திய அளவில்  500 முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: