டெஸ்ட் தொடர்: முகமது ஷமி, ஜடேஜா விலகல்

மும்பை: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் சட்டோகிராமில் வரும் 14-18ம் தேதி வரையும், 2வது டெஸ்ட் மிர்பூரில் 22-25ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பிற்கு உட்பட்ட இந்த தொடரில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகி உள்ளார். தோள்பட்டையில் காயம் அடைந்த ஷமி முன்னதாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார்.

இதேபோல் முழங்கால் காயம் காரணமாக ஜடேஜாவும் அணியில் இருந்து விலகி இருக்கிறார். கட்டைவிரல் காயம் காரணமாக ரோகித்சர்மாவும் டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகம் தான். இந்நிலையில் ஜடேஜா, ஷமிக்கு பதிலாக பீகாரைச் சேர்ந்த மிதவேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார், ஆல்ரவுண்டர் சவ்ரப்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது வங்கதேச ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: