டுரின்: ஏடிபி பைனல்ஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரின் சாதனையை சமன் செய்தார். சீசன் முடிவு உலக தரவரிசையில் ‘டாப் 8’ இடங்களை பிடித்த வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரின் ஒற்றையர் பைனலில் நார்வே வீரர் கேஸ்பர் ரூடுடன் (23 வயது) மோதிய ஜோகோவிச் (35 வயது) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 6 வது முறையாக ஏடிபி பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 32 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
