ஐதராபாத்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடிலீக் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. இதில் நேற்று நடந்த 87வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் 42-29 என உ.பி.யோத்தாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் 32-26 என யு மும்பாவை சாய்த்தது.