புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 70வது லீக் போட்டியில் உபி.யோத்தா 40-34 என அரியானாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் யுமும்பா 34-33 என புனேரி பால்டனை வென்றது. 72வது போட்டியில் பாட்னா 37-30 என ஜெய்ப்பூரை வீழ்த்தி 6வது வெற்றியை ருசித்தது.