உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் பங்கேற்க ஈகுவடார் அணிக்கு அனுமதி அளித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவு..!!

ஜெர்மனி: எதிர்வரும் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் பங்கேற்க ஈகுவடார் அணிக்கு அனுமதி அளித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஈகுவடார் அணியில் இடம்பிடித்திருக்கும் 23 வயது வீரர் காஸ்டிலோ, அந்நாட்டையே சாராதவர் என குற்றம்சாட்டி அணி மீது நடவடிக்கை எடுக்க சிலி வலியுறுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டில் உள்ள டொமாக்கோ நகரில் அவர் 1995ல் பிறந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதனை விசாரித்த ஜெர்மனியில் இருக்கும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், சிலியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் தவறான சான்றிதழ்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக அடுத்த உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 3 புள்ளிகளை சிலி அணிக்கு குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அணிக்கு சுமார் 8.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் ஈகுவடார், கத்தார், நெதர்லாந்து, சினக்கல் ஆகிய அணிகள் உடன் லீக் சுற்றில் விளையாட இருக்கிறது.

Related Stories: