டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்: ஸ்வியாடெக், கார்சியா அசத்தல்

ஃபோர்ட் வொர்த்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் லீக் ஆட்டங்களில் கரோலின் கார்சியா, இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றனர். ரோஸி கேசல்ஸ் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) தனது முதல் ஆட்டத்தில் டாரியா கசட்கினாவுடன் (ரஷ்யா, 8வது ரேங்க்) மோதினார். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-2, 6-3 என நேர்  செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

ஸ்வியாடெக் இந்த ஆண்டு   நேர் செட்களில் வெல்லும் 46வது ஆட்டம் இது.  இதன் மூலம் முன்னாள் வீராங்கனை அக்னிஸ்கா ரட்வன்ஸ்காவின் (போலந்து) சாதனையை அவர் சமன் செய்தார். 2013ல்  செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 66 ஆட்டங்களில் நேர் செட்களில் வென்று முதலிடம் வகிக்கிறார். ரோஸி கேசல்ஸ் பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில்  கரோலின் கார்சியா (பிரான்ஸ், 6வது ரேங்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் கோரி காஃபை (அமெரிக்கா, 4வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி ஒரு மணி, 18 நிமிடங்களுக்கு நீடித்தது.

Related Stories: