சேலம் நீதிமன்றத்தில் ஊழியரால் கத்தி குத்துப்பட்ட நீதிபதியிடம் குறுக்கு விசாரணை

சேலம்: சேலம் நீதிமன்றத்தில், கத்தியால் குத்தப்பட்ட நீதிபதியிடம் குறுக்கு விசாரணை நடந்தது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் பொன் பாண்டியன். கடந்த மார்ச் 1ம்தேதி நீதிமன்ற பணியில் இருந்தார். அப்போது அலுவலக உதவியாளரான பிரகாஷ், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் லேசான காயத்துடன் நீதிபதி பொன் பாண்டியன் உயிர்தப்பினார். இதையடுத்து உதவியாளரை பிடித்து அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். அலுவலக ஊழியர் பிரகாசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காயம் அடைந்த நீதிபதி பொன்பாண்டியன் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரவி முன்னிலையில், நீதிபதி பொன் பாண்டியனிடம் குறுக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. மூத்த வக்கீல் பா.ப.மோகன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

Related Stories: